தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூர் கிளைச் சிறையில் இரு சிறை காவலர்களுக்கு கரோனா - கடலூர் செய்திகள்

கடலூர்: கிளைச் சிறையில் பணியாற்றும் இரண்டு சிறை காவலர்கள், சமையலர் உள்பட மேலும் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

sub jail
sub jail

By

Published : Jun 29, 2020, 8:01 AM IST

கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசின் அறிவுறுத்தல்களின் படி, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

முகக்கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றிட வேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் நாள்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடலூர் கிளை சிறைச்சாலையில் இரண்டு சிறை காவலர்கள், சமையலர் உள்பட மேலும் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடலூர் கிளை சிறைச்சாலையில் கண்காணிப்பாளர், இரண்டு காவலர்கள் என மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் மூன்று பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கடலூர் கிளை சிறைச்சாலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. இருப்பினும், சிறைக் கைதிகளுக்கு இதுவரை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.

ABOUT THE AUTHOR

...view details