தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதகாலமாக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக தற்போது வரை 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் தற்போது கடலூர் மாவட்டத்தில் மீண்டுமொறு மோசடி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (70). ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான இவர், தன்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்விடம் புகார் அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது, “எனது மகன் மணிவண்ணன் (37) பொறியியல் முடித்துள்ளார். இவருக்கு கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த சமரசம் (47), காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் (73) ஆகிய இருவரும் என்னிடம் ரூபாய் ஒன்பது லட்சம் பணத்தை வாங்கினர்.