தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரத்தில் தொடரும் குழந்தைத் திருமணங்கள்; மணமுடித்த தீட்சிதருக்கு வலைவீச்சு - TN chidambaram natrajar temple dikshitars arrest

அடுத்தடுத்து வெளிவரும் சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர்களின் குழந்தைத் திருமணம் விவகாரம் தொடர்பாக, நான்கு பேரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 5, 2022, 11:29 AM IST

கடலூர்:கடந்த 2021ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் தீட்சிதர் ஒருவரின் 13 வயது மகளுக்கும், 19 வயது தீட்சதர் ஒருவருக்கும் குழந்தை திருமணம் நடந்தது குறித்த புகாரில் ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு இருவரை கைது செய்துள்ளனர்.

குழந்தை திருமணம்:சிதம்பரத்தில் கடந்த 2021 ஜனவரி மாதம் ஒரு தீட்சிதரின் 13 வயது மகளுக்கு 19 வயது தீட்சிதருடன் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பாக தற்பொழுது சமூக நலத்துறையின் ஊர் நலத்துறை அலுவலர் சித்ரா, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திருமணம் செய்த பத்ரிசன் தீட்சிதர் மற்றும் அவரது தந்தை நாகரத்தினம், மணமகனின் அண்ணன் சூர்யா, சிறுமியின் தந்தை ராஜ கணேச தீட்சிதர், தாய் தங்கம்மாள் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

நான்கு பேருக்கு வலைவீச்சு:மேலும் இதில் மணமகனின் அண்ணன் சூர்யா மற்றும் சிறுமியின் தாய் தங்கம்மாள் ஆகிய இருவரையும் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பத்ரிசன் தீட்சிதர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர்களில் குழந்தைத் திருமண விவகாரம் அடுத்தடுத்து வெளியில் வந்து தீட்சிதர்கள் கைது செய்யப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், 10-க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் போலீசாரின் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரியவருகிறது. இதனால், நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர்களின் குழந்தை திருமணம் விவகாரம் - நான்கு பேருக்கு வலைவீச்சு

கைது நடவடிக்கை:வரலாற்றுச்சிறப்புமிக்க சிதம்பரம் நடராஜர் ஆலயம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதில் ஒன்று குழந்தை திருமணம் செய்வது. தீட்சிதர்கள் தங்களது குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகவும் திருமண வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்வது வைப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆனால், இவற்றிற்கு ஆதாரம் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து குழந்தைத் திருமணங்கள் ஆதாரத்துடன் வெளிவரும் நிலையில் தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணம் தொடர்பாக கடந்த வாரம் இரண்டு தீட்சிதர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும், ஒரு சம்பவம் வெளிவந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கர்ப்பமான 14 வயது சிறுமி உட்பட கடத்தப்பட்ட 13 சிறுமிகள் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details