கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் தலைமை தாங்கினார்.
இதில், சிறப்பு விருந்தினராக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடப்படும் மரக்கன்று முதல் கட்டமாக 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் இவ்விழாவில் கடலூர் அதிமுக முன்னாள் நகரமன்றத் தலைவர் குமரன், துணைத்தலைவர் சேவல் குமார், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பிறந்தநாளில் மரக்கன்றுகளுக்கு உயிரூட்டிய விவேக்...!