தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிகளை மீறிய ஆட்டோ; நிறுத்தி வைத்து இருக்கைகளை அகற்றிய டிராபிக் ராமசாமி

கடலூர்: நாகையிலிருந்து கடலூர் சென்றுகொண்டிருந்த டிராபிக் ராமசாமி, வழியில் விதிகளை மீறி ஆட்களை ஏற்றிச்சென்ற ஆட்டோவைத் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டார்.

Cuddalore traffic ramasamy advice, auto which violated traffic rules, traffic ramasamy, Traffic Ramasamy stopped the auto,  ட்ராஃபிக் ராமசாமி, ட்ராபிக் ராமசாமி
traffic ramasamy

By

Published : Feb 6, 2020, 3:50 PM IST

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நாகப்பட்டினத்தில் இருந்து கடலூர் வழியாக சென்னை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கடலூர் பாரதி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சிலர் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாமல் ஆட்டோவில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தனர்.

இதனைப் பார்த்த அவர், திடீரென காரில் இருந்து இறங்கி, அந்த வழியாக சென்றவர்களின் வாகனங்களை மறித்து அவர்களுக்கு சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். இதற்கிடையே அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவில் 12 பேர் அமர்ந்து பயணம் செய்தனர்.

இதனைப் பார்த்த டிராபிக் ராமசாமி, அந்த ஆட்டோவை வழிமறித்தார். பின்னர் பயணிகளை ஆட்டோவில் இருந்து இறங்குமாறு கூறினார். இதையடுத்து ஆட்டோவில் இருந்து பயணிகள் இறங்கியதும், போக்குவரத்து விதி முறையை மீறி ஏன் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்தீர்கள் என ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டு, அவருக்கு அறிவுரை கூறினார்.

இருக்கைகளை அகற்றிய டிராபிக் ராமசாமி

அதன்பின்னர் ஆட்டோ ஓட்டுநர் இருக்கையின் பின்புறம் கூடுதலாக மரப்பலகையால் அமைக்கப்பட்டிருந்த இருக்கையை, அங்கிருந்த சிலரின் உதவியுடன் அகற்றினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கடலூர் புதுநகர் காவல் துணை ஆய்வாளர் மணிகண்டன், விரைந்து வந்து டிராபிக் ராமசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் டிராபிக் ராமசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details