தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘நான் விவசாயிதான், ஸ்டாலினுக்கு தொழில் இல்லையென்றால் நான் என்ன செய்ய முடியும்’ - எடப்பாடி பழனிசாமி - TN CM edappadi palanisamy news

கடலூர்: ”நான் விவசாயி தான், ஸ்டாலினுக்கு தொழில் இல்லை என்றால் நான் என்ன செய்யமுடியும்” என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார்.

‘நான் விவசாயி தான், ஸ்டாலினுக்கு தொழில் இல்லையென்றால் நான் என்ன செய்ய முடியும்’ -எடப்பாடி பழனிசாமி!
‘நான் விவசாயி தான், ஸ்டாலினுக்கு தொழில் இல்லையென்றால் நான் என்ன செய்ய முடியும்’ -எடப்பாடி பழனிசாமி!

By

Published : Mar 19, 2021, 10:10 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் கடலூர், சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பாளர் பாண்டியனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “நமது கூட்டணி பலமான கூட்டணி வெற்றி கூட்டணி. நமது அரசு காவிரி உரிமைகளை உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி பெற்றுத் தந்தது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்து, அதனை பாதுகாத்து தந்திருக்கிறோம்.

‘நான் விவசாயி தான், ஸ்டாலினுக்கு தொழில் இல்லையென்றால் நான் என்ன செய்ய முடியும்’ -எடப்பாடி பழனிசாமி

ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு போன்ற கொடிய திட்டங்களைக் கொண்டு வந்தது திமுக அரசு. இதனைத் தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு. சிதம்பரம் தொகுதியில் திட்டுக்காட்டூர் உயர்மட்ட பாலம், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது அம்மாவின் அரசு. நான் விவசாயி தான், என்னுடைய தொழில் விவசாயம் மட்டுமே ஸ்டாலினுக்கு தொழில் இல்லை என்றால் நான் என்ன செய்யமுடியும்?” என்றார்.

இதையும் படிங்க...கமலை கலாய்த்த வானதி சீனிவாசன்

ABOUT THE AUTHOR

...view details