அதிமுக சார்பில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சந்திரசேகர் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜயலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதேபோல் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிவஜோதி மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஜெகதீசன், தேசிய மக்கள் சக்தி கட்சி பார்வதி ஆகியோர் தங்களுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளரிடம் பேசிய அதிமுக வேட்பாளர் சந்திரசேகர், நீண்ட வருடங்களாக கிடப்பிலேயே இருக்கும் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்தை உடனே தொடங்கவும் அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் தெரிவித்தார்.
மேலும், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.