தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஊருக்குள் வந்தால் உன்னை வெட்டுவோம்' - தோல்வியடைந்த வேட்பாளரின் கணவர்! - local body election news

கடலூர்: ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளரின் கணவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதால் கிராமத்திற்குச் செல்ல அச்சப்பட்டு அவர் வாக்கு எண்ணும் மையத்தில் தங்கியுள்ளார்.

cuddalore
cuddalore

By

Published : Jan 3, 2020, 9:12 AM IST

கடலூர் மாவட்டம் குண்டு உப்பலவாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மதியழகன் என்பவரின் மனைவி சாந்தி 145 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். சாந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட தாழங்குடா கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி மனைவி பிரவீனா தோல்வி அடைந்தார்.

இதனால் மாசிலாமணி, வெற்றிபெற்ற சாந்தியின் கணவர் மதியழகனை 'ஊருக்குள் நுழைந்தால் உன்னை வெட்டிவிடுவோம்' என மிரட்டியுள்ளார்.

வாக்கு எண்ணும் மையம்

இதனால் அஞ்சிய மதியழகன், அவரது ஆதரவாளர்கள் நேற்றிரவு 11 மணிவரை கிராமத்திற்குச் செல்லாமல் வாக்கு எண்ணும் மையத்திலேயே தங்கியுள்ளனர். பின்னர், கடலூர் காவல் துணைக்கண்காணிப்பாளரிடம் பாதுகாப்புக் கோரி மனு அளித்தார்.

இதனால் அவரின் பாதுகாப்புக்கு காவல் துறை சார்பில் ஐந்து காவலர்கள அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் உயிர் பயத்தால் மதியழகன் வாக்கு மையத்திலேயே தங்கினார்.

இதையும் படிங்க: வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய தேர்தல் அலுவலர்..!

ABOUT THE AUTHOR

...view details