தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 100ஆவது நாளில் நடைபெற்ற போராட்டத்தில் 14 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - முதலாமாண்டு நினைவஞ்சலி! - thoothukudi
கடலூர்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கடலூரில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
thoothukudi
இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கடலூர் அனைத்து பொதுநல இயக்க கூட்டமைப்பின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஒருங்கிணைப்பாளர் வெண் புறா குமார் தலைமை தாங்கினார் மற்றும் சுப்புராயன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.