தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தனித்திருந்தால் எந்தவொரு பாதிப்பும் இல்லை' - எம்.சி. சம்பத் - தமிழ்நாட்டில் கரோனா

கடலூர்: பொதுமக்கள் தனித்திருந்தால் கரோனாவால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

minister-mc-sampath
minister-mc-sampath

By

Published : Mar 25, 2020, 10:37 PM IST

கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தகவல் கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், பொதுமக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி தனித்திருந்தால் எந்தவொரு பாதிப்பும் இல்லை. மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு ஆயிரம் படுக்கைகள் செயல்பாட்டில் உள்ளன.

தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்

கடலூர், சிதம்பரம், நெய்வேலி, திட்டக்குடி, விருதாச்சலம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மருத்துவர்கள் முன்னெச்சரிக்கைகாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசும், மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கையாகவும் தயார் நிலையிலும் உள்ளன. 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்", என்றார்.

இதையும் படிங்க:ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவக் கட்டுப்பாட்டு அறை தொடக்கம் - கடலூர் ஆட்சியர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details