கடலூர்:காட்டுமன்னார்கோவில் ஜெயராம் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் வள்ளல் பெருமான்(42). இவர் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி வள்ளல் பெருமானுக்குப் பலத்த அடிபட்ட நிலையில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாற்றப்பட்டார்.