தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் மாணவனைத் தாக்கிய பள்ளி ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி ஆசிரியர்கள் போராட்டம் - கடலூர்

கடலூர்: அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் முன்னாள் மாணவனைத் தாக்கிய பள்ளி ஆசிரியரின் வீடியோ வைரல் ஆகியுள்ளதால் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். எனவே ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆசிரியர்கள் போராட்டம்

By

Published : Oct 4, 2019, 1:33 PM IST

கடலூர் மஞ்சகுப்பத்தில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 2017-2018ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் ஐந்து பேருக்கு அரசு வழங்கும் மடிக்கணினி வழங்கக் கோரி பள்ளி முதல்வரிடம் கேட்டுள்ளனர். இதற்கு முதல்வர் 2017-18ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வரவில்லை என்றும் அரசு வழங்கோரி உத்தரவிட்டால் வழங்குவதாகக் கூறி அனுப்பிவிட்டார்.

பின்னர் பள்ளி வளாகத்தில் சுற்றிய அந்த மாணவர்கள் சத்தமிட்டு கூச்சலிட்டு சென்றுள்ளனர். இதனை அங்கு பணியில் இருந்த உடற்பயிற்சி ஆசிரியர் சந்திரமோகன், பள்ளி வளாகத்தில் சத்தமிட்டு செல்லவேண்டாம் வெளியே போய் சத்திமிட்டு கொள்ளுங்கள் என்று மாணவர்களிடம் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியரை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த உடற்பயிற்சி ஆசிரியர் கெட்ட வார்த்தையால் திட்டுவாயா என்று கூறி மாணவனை தாக்கியுள்ளார். இதனை மற்ற மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து கடலூர் புதுநகர் காவல்துறையினரிடம் காட்டி புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் காவல்துறையினர் ஆசிரியரிடம் விசாரணை செய்து கைது செய்தனர். ஆசிரியர் கைதைக் கண்டித்து பள்ளியின் சக ஆசிரியர்கள் அவரை விடுதலை செய்யக் கோரியும், பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புக், தவறு செய்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பள்ளி நிர்வாகம் சார்பில் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சென்சாருக்குள் வருகிறதா ஹாட்ஸ்டார், நெட்பிலிக்ஸ்?

ABOUT THE AUTHOR

...view details