இது தொடர்பாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில் "5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் டாஸ்மாக் பணியாளர்களுக்குகான முக்கியமான கோரிக்கையான பணி நிரந்தரம் காலமுறை ஊதிய விகிதம் பணி இழப்புக்கு ஆளாகும் பணியாளர்களுக்கு அரசுத் துறையில் பணியமர்த்தல் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் குறித்து அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
பணியாளர்கள் இறந்தால் வாரிசுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் - டாஸ்மாக் பணியாளர் சங்கம்! - பணியாளர்கள்
கடலூர்: டாஸ்மாக் பணியாளர்கள் இறந்தால் அவர்களின் வாரிசுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஆணை பிறப்பிக்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை அரசு கோரிக்கை நிறைவேற்றாத காரணத்தினால் வருகிற மே மாதம் இறுதியில் மாநில அளவில் பிரதிநிதிகள் மாநாடு நடத்துவது எனவும் அந்த மாநாட்டில் முடிவு செய்து ஜூன் மாதத்தில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களை திரட்டி மாநில டாஸ்மாக் அலுவலகம் முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடத்துவது என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், மத்திய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும். அன்றாட டாஸ்மாக் பணியாளர்கள் இறப்பு செய்தி கேட்டுக்கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பணியாளர்கள் இறந்தால் அவர்களுடைய வாரிசுக்கு வேலை அளிக்கக்கூடிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.