தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஏரி நீரை விற்பனை செய்தால் நடவடிக்கை' - ஆட்சியர் எச்சரிக்கை - ஏரி

கடலூர்: ஏரி குளங்களில் உள்ள தண்ணீரை வணிகரீதியாக விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

File pic

By

Published : May 22, 2019, 10:07 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு ஒவ்வொருவருக்கும் 55 லிட்டர் குறையாமல் சீரான சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கோடைக் காலத்தில் வறட்சியால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட அத்தியாவசிய குடிநீர் பணிகளுக்கு ரூ. 735.48 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்திட அனுமதிக்கப்பட்டுள்ளது. பொது பகிர்மான குழாய்களில் மின் மோட்டார்களை பயன்படுத்தி குடிநீரை எடுத்தால் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்திட சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏரி குளங்களில் உள்ள தண்ணீரை வணிக ரீதியாக விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் குழாய்களில் தண்ணீர் கசிதல் மற்றும் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1941ல் தொடர்புகொண்டு மாவட்ட குடிநீர் கண்காணிப்பு அழைத்து தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்", என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details