கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் புகழ் பெற்ற கோயில் ஆகும். நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிற்றம்பல மேடையில் ஏறி நின்று, சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது வழக்கம்.
ஆனால், கடந்த சில நாட்களாக கோயில் தீட்சிதர்கள் பக்தர்களை சிற்றம்பல மேடையில் ஏற்றி சாமி தரிசனம் செய்ய தடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அங்கு பக்தர்கள்- தீட்சிதர்கள் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
காங்கிரஸ் போராட்டம்:மேலும் காங்கிரஸ் உள்ளிட்டப் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் பக்தர்களை சிற்றம்பல மேடையில் ஏற்றி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதைத்தொடர்ந்து வருகிற 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தனர். இதானல் அங்கு மேலும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.