தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் நீதிபதி வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை

கடலூர்: காடாம்புலியூர் காவல் நிலையம் அருகே உள்ள பெண் நீதிபதி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cuddalore robbery
robbery at judge house

By

Published : May 23, 2020, 2:58 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் கள்ளக்குறிச்சி ஜே.எம் 2 நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். பணி நிமித்தமாக கள்ளக்குறிச்சியில் தங்கி இருக்கிறார்.

இந்நிலையில், இவருடைய சொந்த ஊரான காடாம்புலியூரில் உள்ள அவரது வீட்டில் நேற்று (மே 22) இரவு பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகையை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நீதிபதி வீட்டில் வாடகைக்கு செயல்பட்டு வரும் அடகு கடையிலும் 7 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து காடாம்புலியூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர். நீதிபதி வீடும் அடகு கடையும் காடாம்புலியூர் காவல் நிலையம் அருகே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேடிச் சென்றது ஒன்று; கிடைத்தது ஒன்று!

ABOUT THE AUTHOR

...view details