தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரைமிங்கான வசனங்கள்: சாலை விதிகளை எளிமையாகப் பரப்பிய புகைப்படக் கலைஞர்கள்! - சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கடலூர்: எளிமையான வசனங்கள் மூலம் சாலை விதிகளைப் பரப்பிய புகைப்படக் கலைஞர்கள் அப்பகுதியில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளனர்.

புகைப்பட கலைஞர்கள் பங்கேற்ற  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
புகைப்பட கலைஞர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

By

Published : Mar 10, 2020, 2:50 PM IST

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்றனர். இந்தப் பேரணியை கடலூர் நகர அரங்கிலிருந்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

இதில், தலைக்கவசம், சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்த எளிய வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வுப் பதாகைகள் கொண்டுசெல்லப்பட்டன. இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்துகொண்டு, பதாகைகளை ஏந்தியபடி புகைப்படக் கலைஞர்கள் பேரணியாகச் சென்றனர். கடலூர் பாரதி சாலை, இம்பெரியல் சாலை வரை சென்ற இப்பேரணியில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: ஈரானில் சிக்கித் தவிக்கும் கணவர் - கைக்குழந்தையுடன் மனு அளித்த பெண்!

ABOUT THE AUTHOR

...view details