தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் வாக்காளர்களைக் கவர சிவப்பு கம்பள வரவேற்பு! - கடலூர் அண்மைச் செய்திகள்

கடலூர்: நூறு விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்ய, சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்ட வாக்குப்பதிவு மையம் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி ஈடிவி பாரத் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

ஈடிவி பாரத் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த கடலூர் ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி.
ஈடிவி பாரத் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த கடலூர் ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி.

By

Published : Apr 5, 2021, 11:05 PM IST

கடலூர் மாவட்டத்தில் ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 ஆயிரத்து ஒன்று வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூரில் நகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையம் ஒன்றில், நூறு விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு மையம் வாழை மரங்கள், பலூன் தோரணங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பதற்கே நட்சத்திர விடுதிகள் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளன.

ஈடிவி பாரத் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த கடலூர் ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி ஈடிவி பாரத் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “நூறு விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இரண்டு மாதிரி வரவேற்பு வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு உபசரிக்கப்படுவர்” என்றார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம்

ABOUT THE AUTHOR

...view details