கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி 17ஆவது மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற்றது. அப்போது திருவதிகையின் 210ஆம் எண் வாக்குச்சாவடியில் அமமுக வேட்பாளர் காசி தங்கவேலு பேருக்கு நேராக உள்ள பட்டன் இல்லாததைத் தொடர்ந்து மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மே 19ஆம் இந்த மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
திருவதிகையில் பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு! - திருவதிகை
கடலூர்: திருவதிகை வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதையொட்டி, காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று கடலூரில் உள்ள திருவதிகை வாக்குச்சாவடியில் மக்கள் காலையில் இருந்து ஆர்வமுடன் வாக்களித்துவருகின்றனர். வாக்குச்சாவடியில் மொத்தம் 657 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்குப்பதிவு குறித்து ஆட்டோ விளம்பரம், கிராம நிர்வாக அலுவலர், உள்ளாட்சி அலுவலகத்தில் அறிவிப்புகள் ஒட்டப்பட்டன.
மேலும் தண்டோரா மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் பலத்த காவல் துறையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நேரில் வந்து பார்வையிட்டார்.