தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலியோ சொட்டு மருந்தால் குழந்தை இறப்பு: கதறும் பெற்றோர்! - போலியோ சொட்டு மருந்து

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே ஒரு வயது குழந்தை இறந்துள்ள நிலையில் போலியோ சொட்டு மருந்தால்தான் குழந்தை இறந்துள்ளதாக கூறி பெற்றோர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

போலியோ சொட்டு மருந்து
போலியோ சொட்டு மருந்து

By

Published : Jan 20, 2020, 11:16 PM IST

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த பண்ணப்பட்டு கிராமத்தில் வசித்துவருபவர்கள் அலெக்சாண்டர், ஜெயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 13 மாத ஹரிஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

போலியோ சொட்டு மருந்து போடுவதற்காக டி.மணலூர் கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்திற்கு குழந்தையை நேற்று காலை அழைத்து சென்று சொட்டு மருந்து போட்டுள்ளனர். மாலை நான்கு மணியளவில் ஹரிஷ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குழந்தையை சிதம்பரத்தில் உள்ள காமராஜர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பின்னர், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்ட பெற்றோர் கதறி அழுதனர். போலியோ சொட்டு மருந்து போட்டதால்தான், தன் குழந்தை இறந்துவிட்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

சொட்டு மருந்தால் உயிரிழந்த குழந்தை

பின்னர், குழந்தையின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தன் குழந்தைக்கு ஏற்பட்ட நிலைமையைப்போல், வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது என கூறியுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி குழந்தையை கடத்திய பெண் கைது.!

ABOUT THE AUTHOR

...view details