கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்துள்ள குறவன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மகள் ராதிகா (19), கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதேபகுதியில் உள்ள மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவரின் மகன் பிரேம்குமார் (20) முகநூல் மூலம் ஆபாச கருத்துகளை ராதிகாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்து அத்திரமடைந்த ராதிகா அந்த இளைஞரை திட்டி மறுபதிவு செய்துள்ளார். இந்த பதிவைப் பார்த்த பிரேம்குமாரின் உறவினர்கள், ராதிகா வீட்டிற்கு வந்து பிரச்னை செய்ததுள்ளனர். இதனால் விரக்தியடைந்த மாணவி ராதிகா அன்றைய தினமே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த ராதிகாவின் மாமன் மகனும், காதலனுமான விக்னேஷ், மாணவி இறந்த துக்கம் தாங்கமால் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.