தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹனுமான் கோவில் அறங்காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு... - Barangaypet police

சிதம்பரம் அருகே ஹனுமான் கோவில் அறங்காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 29, 2022, 10:51 AM IST

கடலூர்:தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும், மர்ம நபர்கள் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு வருவது தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் பரங்கிப்பேட்டை சாலையில் இந்து முன்னணி ஆதரவாளரான சீனு என்கிற ராமதாஸ் வசித்து வருகிறார். இவர், ஸ்ரீ ராம ஹனுமான் கோவில் அறங்காவலராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

ஹனுமான் கோவில் அறங்காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

இந்நிலையில், நேற்று(செப்328) நள்ளிரவில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நான்கு சக்கர வாகனம் ஜீப் மற்றும் அருகில் உள்ள மரத்தின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றுள்ளனர். இதில் ஜீப் முன்பக்கம் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது, அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. இது தொடர்பாக பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:இந்த தலைமுறைக்கும் வாசிக்கும் பழக்கத்தை பொன்னியின் செல்வன் ஏற்படுத்தியுள்ளது - கார்த்தி

ABOUT THE AUTHOR

...view details