கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த சத்யா பன்னீர்செல்வம் இருந்துவந்தார். இவர் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார்.
ஆனால் அவருக்குப் பதிலாக பண்ருட்டி அருகே உள்ள சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனுக்கு அதிமுக தலைமைக்கழகம் வாய்ப்பளித்தது. இதையடுத்து சத்தியா பன்னீர்செல்வம் மாற்றுக் கட்சியில் சேர்ந்துவிடுவார் எனப் பரவலாகப் பேசப்பட்டது.
இருப்பினும் சில அதிமுக எம்எல்ஏக்களுக்கு கட்சியில் உயர் பதவி வழங்குவதாக தெரிவித்தனர். இரண்டு நாள்கள் ஆகியும் கட்சி நிர்வாகம் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காதாதல், சத்யா பன்னீர்செல்வம் தற்போது அரசியலிலிருந்து விடுபடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் திருக்குறளின் 'மானம்' அதிகாரத்தில் உள்ள 967ஆவது குறளை மேற்கோள்காட்டியுள்ளார்.