தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒருதலைக் காதல்: மாணவியை கழுத்தறுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்

ஒருதலைக் காதலால் மாணவி கழுத்தை அறுத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

one side love youth attempt to murder his friend and try to commite suicide
Intro:தனித்து நிற்க தயாராகிறதா தேமுதிக?Body:தனித்து நிற்க தயாராகிறதா தேமுதிக?சென்னை: சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6 ம் தேதி நடைபெறும் நிலையில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மையம் மற்றும் மற்ற கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளை முடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில், அதிமுக-தேமுதிக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து கொண்டே வருகிறது. மேலும், தேமுதிக தலைமை கழகத்தின் சார்பில் மார்ச் 6 முதல் 8 வரை விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், இன்று காலை தேமுதிகவின் நிர்வாகிகள் அதிமுகவின் அமைச்சர்களான தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோரை சந்திக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில், தேமுதிகவின் நிர்வாகிகள் பேச்சவார்த்தையை தவிர்த்தனர் என்று சொல்லப்படுகிறது. மேலும், இன்று மாலை தேமுதிகவின் நிர்வாகிகள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திடம் கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக நேரம் ஒதுக்க கேட்டனர், இருப்பினும், அதிமுகவின் சார்பில் முறையான பதில் வரவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த தேமுதிகவினர் தனியாக போட்டியிடலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.இந்த நிலையில் தேமுதிகவின் பொருலாளர் பிரேமலதா விஜயகாந்த் அமமுகவின் தலைவரான சசிகலாவை சந்தித்து கூட்டணி பற்றி பேச வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் கட்சியின் நிர்வாகிகள். சசிகலா பெங்களூரு சிறையிலுருந்து விடுதலையாகி தமிழகம் வந்தவுடன், பிரேமலதா தான் பெண் என்ற முறையில் சசிகலாவை நலம் பெற வாழ்த்தினார். தொடர்ந்து, பிரேமலதா சசிகலாவை சந்திக்கலாம் என்ற தகவல் வெளியாகி கொண்டே இருக்கிறது.தேமுதிக துணை செயலாளர் எல். கேசுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் "நமது முதல்வர் விஜயகாந்த் , நமது சின்னம் முரசு" என்று பதிவிட்டதால், இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, தேமுதிக தனியாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கலாம் என்ற பேச்சு அடிபட தொடங்கியுள்ளது.இன்று, தேமுதிக தலைமை கழகத்தின் சார்பில் மார்ச் 6 முதல் 8 வரை விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும் என்று கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் நடக்கும் நேர்காணலில் கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனீ, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களிலிருந்து வரும் நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தப்படும். இதே போல, மார்ச் 7 ம் தேதி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் செங்கல்பட்டு நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தப்படும்.மார்ச் 8 ம் தேதி, மதுரை, திண்டுக்கல், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை நிவாகிகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : Mar 1, 2021, 9:20 PM IST

கடலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜனின் மகள் புனிதா(18). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை படித்துவரும் இவருக்கும், சமயபுரம் ஸ்டீபன்ராஜ் என்பவரது மகன் சேவியர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தன்னை காதலிக்குமாறு புனிதாவை சேவியர் கட்டாயப்படுத்தியதாக தெரியவருகிறது.

இந்நிலையில், இன்று (மார்ச் 1) சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் இருந்து மாணவி புனிதா வரும்போது, தான் மறைத்துவைத்திருந்த பேனா கத்தியால் புனிதாவின் கழுத்தை அறுத்துவிட்டு, தன்னைத்தானே கத்தியால் சேவியர் அறுத்துக்கொண்டார். இதில், படுகாயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் நடத்திய விசாரணையில், புனிதாவை சேவியர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாகவும், மற்றொருவருடன் இருசக்கர வாகனத்தில் புனிதா சென்றதைப் பார்த்து ஆத்திரமடைந்து சேவியர் இப்படி செய்ததாகவும் தெரியவந்தது.

இதையும் படிங்க:நடத்தை விதிமீறல்! - திமுக கொடிகள் அகற்றம்!

ABOUT THE AUTHOR

...view details