தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கொடுக்காததால் கணவர் இறந்துவிட்டதாக மனைவி கதறல்

கடலூர்: அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கொடுக்காததால் கணவர் இறந்துவிட்டதாகக் கூறி, மனைவி கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ஸிஜன் கொடுக்காததால் கணவர் இறந்துவிட்டதாக மனைவி கதறல்
ஆக்ஸிஜன் கொடுக்காததால் கணவர் இறந்துவிட்டதாக மனைவி கதறல்

By

Published : May 20, 2021, 11:09 PM IST

கடலூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 800-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் ஆக்ஸிஜன் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.

திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆக்ஸிஜன் வசதியோடு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. அவருடைய மனைவி கயல்விழி கணவருக்கு உதவியாக மருத்துவமனையில் இருந்துள்ளார்.

ஆக்ஸிஜன் கொடுக்காததால் கணவர் இறந்துவிட்டதாக மனைவி கதறல்

இன்று (மே.20) காலை 10 மணி அளவில் கயல்விழி சாப்பிடுவதற்காக வெளியே சென்றார். திரும்பி வந்து அவர் பார்க்கும்போது மருத்துவர்கள் அவரது கணவருக்கு வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு மற்றொரு நோயாளிக்கு கொடுப்பதற்காகச் சென்றனர். இதனால் அப்பெண்ணின் கணவர் மூச்சித் திணறல் காரணமாக உயிரிழந்தார்.

இதையடுத்து மருத்துவர்கள், காவல் துறையினர் உடலை உடற்கூராய்விற்காக எடுக்க வந்தனர். அப்போது கயல்விழி இறந்த கணவரின் உடலைக் கட்டி பிடித்தபடி 2 மணிநேரத்திற்கும் மேல் கதறி அழுதார். பின்னர் கயல்விழியை சமாதானப்படுத்தி உடலை மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: ஒரு சாமானிய மனிதனின் குமுறல்!

ABOUT THE AUTHOR

...view details