கடலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம்கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் டி. வெங்கடேசன். இவர் கட்சி மேலிடத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர்-நாகை மண்டல பொறுப்பாளர் சி.கே.குமாரவேல் கட்சியில் இருந்து விலகியதால், அவரது ஆதரவால் கட்சியில் இணைந்த தானும் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல் - கடலூர் நிர்வாகி
கடலூர்: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கடலூர் மாவட்ட பொருப்பாளர் டி.வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது கட்சியினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெங்கடேசன்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரே நாளில் மக்கள் மய்யம் கட்சியில் இருந்து இருவர் ராஜினாமா செய்திருப்பது கட்சியினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் அக்கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.சி குமாரவேலு தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடதக்கது.