தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூதாட்டி கழுத்தறுத்து கொலை - காவல்துறை விசாரணை! - தமிழ் குற்றச்செய்திகள்

கடலூர்: கிழிஞ்சிக்குப்பம் அருகே தனியாக வசித்துவந்த 75 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

old-woman-beheaded-police-investigation
old-woman-beheaded-police-investigation

By

Published : Oct 7, 2020, 9:50 PM IST

கடலூர் அடுத்த கிழிஞ்சிக்குப்பம் பஞ்சாயத்துக்குள்பட்ட சந்திகுப்பம் கிராமத்தில் அய்யம்மாள் (75) என்ற மூதாட்டி தனியாக வசித்துவந்துள்ளார். இவருக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் புதுச்சேரி வில்லியனூரிலுள்ள அவரது பேத்தி ஆனந்தி வழங்கி கவனித்துவந்துள்ளார்.

இந்நிலையில் இன்று (அக். 7) காலை பாட்டிக்கு ஆனந்தி உணவு கொண்டுவந்துள்ளார். வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அய்யம்மாள் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதைக்கண்ட அதிர்ச்சியடைந்த ஆனந்தி அலறிவுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ரெட்டிசாவடி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கவால்துறை நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி (35) என்ற மனநலம் பாதிக்கப்பட்டவரின் சட்டையில் ரத்தக்கறை உள்ளதால், மூதாட்டியை கொலை செய்து இருக்கலாம் என்றும் காவல்துறை விசாரணையில் சந்தேகப்படுகின்றனர். மேலும் மூதாட்டி அணிந்திருந்த நகைக்காக வேறு யாராவது கொலைசெய்து இருப்பார்களோ என்ற கோணத்திலும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்திற்கு அபராதம்!

ABOUT THE AUTHOR

...view details