தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெய்வேலியில் கந்துவட்டி கொடுமை- என்எல்சி தொழிலாளி தற்கொலை - etv news

நெய்வேலியில் கந்துவட்டி கொடுமையால் என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியது.

என்.எல்.சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
என்.எல்.சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

By

Published : Mar 9, 2021, 1:04 PM IST

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி வட்டம் 13இல் வசித்து வருபவர் கருப்பன் மகன் முருகேசன் (50). இவர் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று இவரை காணவில்லை. இதனால், பதறிப்போன மனைவி, குழந்தைகள் இவரை பல இடங்களில் வெகு நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்து, அருகில் உள்ள ஒரு வீட்டில் சென்று பார்த்தனர். அங்கு முருகேசன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

அவரின் அருகில் கிடந்த கடிதத்தில், ’ நான் கடன் பிரச்சினைக்கு ஆளாகியுள்ளேன். கந்துவட்டியின் கோரப்பிடியில் சிக்கி உள்ளேன். நான் கடன் வாங்கிய விபரம் என்று அதில் இருப்பது.

“1. நெய்வேலி வட்டம் 19 முருகனிடம் 50,000 பெற்றுள்ளேன். அவர் பல லட்சம் கேட்கிறார்.

2. சண்முகம் நண்டுகுழி 80,000 ஆயிரம் வாங்கியுள்ளேன். அவர் பல லட்சம் கேட்கிறார்.

3. வல்லம் செந்தில்குமாரிடம் 60,000 ஆயிரம் பணம் வாங்கி உள்ளேன். அவர் பல லட்சம் கேட்கிறார்.

4. செந்தில்குமார் நண்பர் நந்தகோபால் காவல் நிலையத்தில் வைத்து மிரட்டி என்னிடம் பல பேப்பர்களில் கையெழுத்து வாங்கியுள்ளார்.

5. பாமக ரத்தினகுமார் ஒரு லட்சம் வாங்கியதில் 30,000 வட்டி கொடுத்துள்ளேன் அவர் பத்து லட்சத்திற்கு எழுதி வாங்கியுள்ளார்.

6. கோட்டேரி ஞானப்பிரகாசம் 40,000 ஆயிரம் வாங்கியதில் 2 லட்சம் கேட்டு எழுதி வாங்கியுள்ளார்.

7. முருகவேல் வசம் 50,000 ஆயிரம் வாங்கி நான் எடுக்கவில்லை செல்வமணி என்பவரிடம் கொடுத்துவிட்டேன்.

தற்போது, எனக்கும் முருகவேலுக்கும் சம்பந்தம் இல்லை” எனக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

இது குறித்து அவரது மனைவி இந்திராணி நெய்வேலி தர்மம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்பேரில் காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர். முருகேசன் அவரது மகளுக்கு திருமணமாகி பதினைந்து நாள்கள் கூட ஆகவில்லை. இந்நிலையில் கந்து வட்டி என்ற கொடுமையில் சிக்கி தற்கொலை செய்துள்ளார்.

இதனையும் படிங்க : கடம்பூர் மலைப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்: இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details