நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின்நிலையம் ஆறாவது அலகில் இரவு பணியிலிருந்த இண்கோசர்வ் ஒப்பந்தத் தொழிலாளியார் சக்திவேல் கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய விபத்தில் உயிரிழந்தார்.
நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது இவரது கை எதிர்பாராத விதமாக பெல்ட்டில் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டது. உடன் இருந்த பணியாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெய்வேலி என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார்.