கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாம் அனல்மின் நிலைத்தின் கொதிகலன் வெடித்து ஜூலை 1ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆறு பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிரந்திர ஊழியர் சிவக்குமார், ரவிச்சந்திரன், ஒப்பந்த தொழிலாளி செல்வராஜ் ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 6) சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்த நிரந்தர தொழிலாளி ஜோதி ராமலிங்கம்(48), வைத்தியநாதன்(45), ஒப்பந்த தொழிலாளி இளங்கோ(48) ஆகிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்நது இன்று காலை ஒப்பந்த ஊழியர் ஆனந்த பத்மநாபன்(44) என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது. என்எல்சி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவம், அக்குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:என்எல்சியில் ஏற்பட்ட விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்