தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமலிங்கத்துக்கு வந்தது நிபா காய்ச்சலா...? - ஜிப்மர்

கடலூர்: காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்த ஒருவர் நிபா அறிகுறியின் பேரில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

nipah

By

Published : Jun 18, 2019, 11:55 PM IST

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் காய்ச்சல் காரணமாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நிபா வைரஸ் தாக்குதல் அறிகுறி இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் ஜிப்மர் மருத்துவர்கள் அவருக்கு ரத்த பரிசோதனைகள் எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர்.

அந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்தே அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ராமலிங்கம் ஜிப்மரில் உள்ள தொற்று நோய் சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

ஜிப்மர் மருத்துவமனை


.

ABOUT THE AUTHOR

...view details