கடலூர்: நெய்வேலி என்எல்சி அதிகாரி ஒருவரது வீட்டில் புள்ளிமான் கொம்புகள் பதுக்கி வைத்திருப்பதாக சென்னை வன உயிரின கட்டுப்பாட்டுக் குழுவுக்கு புகார்கள் சென்றுள்ளன. இதனையடுத்து வன உயிரினக் கட்டுப்பாட்டுக் குழுவினர், மாவட்ட வனத்துறையினர் உதவியோடு, நெய்வேலி இந்திரா நகரைச் சேர்ந்த என்எல்சி அதிகாரி ஸ்ரீதர் (54) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவரது வீட்டில் 1 புள்ளிமான் தோல், 4 மான் கொம்புகள், உயிருடன் இருந்த 2 நட்சத்திர ஆமைகள், ஒரு பச்சைக்கிளி ஆகியவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
மான் கொம்பு, நட்சத்திர ஆமைகளை வீட்டில் வைத்திருந்த NLC அதிகாரி கைது! - star tortoises
மான் கொம்பு, மான் தோல் மற்றும் நட்சத்திர ஆமைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த என்எல்சி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த மான் தோல், கொம்புகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், உயிருடன் இருந்த நட்சத்திர ஆமைகள், கிளி ஆகியவற்றையும் மீட்டனர். பின்னர், இது தொடர்பான விசாரணையில், மான் தோலை வடலூரில் இருந்து ஒருவரிடம் விலைக்கு வாங்கியதாகவும், மற்றவைகளை ரோட்டில் சென்றபோது, சாலையில் கிடந்து எடுத்ததாகவும் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஸ்ரீதர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வனத் துறையினர், கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபருக்கு சாகும் வரை சிறை!