தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்எல்சி தீவிபத்தில் இருவர் பலி: இழப்பீடு கேட்டு 2ஆவது நாளாக போராட்டம்

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி இரண்டாவது நாளாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

neyveli
neyveli

By

Published : May 11, 2020, 2:30 PM IST

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. அனல்மின் நிலையம் உள்ளது. இந்த அனல்மின் நிலையம் இரண்டில் உள்ள ஆறாவது அலகின் உற்பத்திப் பிரிவின் கொதிகலனில் கடந்த 7ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்தில் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் திருச்சி காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் என்.எல்.சி.யில் நிரந்தர ஊழியராகப் பணியாற்றிவந்த சர்புதீன் என்பவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் (மே 8) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சண்முகம் (49) என்ற ஒப்பந்தத் தொழிலாளியும் சிகிச்சைப் பலனின்றி நேற்று (மே 10) உயிரிழந்தார்.

இதனிடையே உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி என்.எல்.சி. அனல்மின் நிலையம் முன்பு இறந்த சண்முகத்தின் உறவினர்கள், சக ஊழியர்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:என்எல்சி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து: 8 பேர் கவலைக்கிடம்

ABOUT THE AUTHOR

...view details