தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனி மாவட்ட கோரிக்கை; ஒற்றைக் காலில் நாம் தமிழர் கட்சியினர் பிடிவாதம்! - தனி மாவட்டம்

கடலூர்: விருதாச்சலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஒற்றைக்காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாம் தமிழர்

By

Published : Feb 13, 2019, 11:59 PM IST

விருதாச்சலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி முஸ்லிம் சமுதாய முன்னேற்ற சேவை மைத்தினர் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சியினரும் இதே கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஒற்றைக்காலில் நின்றபடி, விருதாச்சலத்தை தலைமையாக கொண்ட புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்பது தொடர்பான பல்வேறு கோஷங்களை முழங்கினர். இதற்கு அக்கட்சியின் மாவட்ட தலைவர் கதிர்காமன் தலைமையில் நடத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கிய புதிய மாவட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், அதற்கு விருத்தாசலத்தை தலைமை இடமாக அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details