தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்களுக்கான புதிய கரோனா வார்டு: திறந்து வைத்த வேளாண்துறை அமைச்சர் - வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடலூர்: காவலர்களுக்கு என பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட ஆக்சிடென்ட் படுக்கை வசதிகளை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

வேளாண்துறை அமைச்சர்
வேளாண்துறை அமைச்சர்

By

Published : May 29, 2021, 10:28 PM IST

கடலூர் மாவட்டத்தில் கரோனா நோய் தாக்கத்தினால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களும், அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் நான்கு காவலர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதற்கு மாவட்டத்தில் சிகிச்சை பெற ஆக்சிஜன், படுக்கை வசதிகள் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது.

இதனையறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபினவ், கடலூர் சிப்காட்டில் உள்ள டேன்பேக், கெம்பிளாஸ்ட், ஈ.ஜ.டி பாரி நிறுவனங்கள் உதவியுடன் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகளை அமைக்கத் தீர்மானித்தனர். அதன்படி முதல் கட்டமாக மாவட்டக் காவலர் மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய 18 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கரோனா வார்டு அமைக்கப்பட்டது.

இந்தப் புதிய கரோனா வார்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இதில் காவலர்கள், காவலர்களின் குடும்பத்தினர், முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பலசுப்பிரமணியம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபினவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details