கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (ஆக.10) காணொலி காட்சி மூலம் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளும், பொது மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டமானது மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திர சேகர் சாகமூரி முன்னிலையிலும், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையிலும் நடைபெற்றது.
இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், "கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கிராம கண்காணிப்புக்குழு மூலம் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நோய் தொற்றுக்குள்ளானவர்களின் குடும்பங்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் அத்தியாவசிய தேவைகளான உணவு பொருள்கள் வழங்கப்படுகிறது.