கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "மாநில தேர்தல் ஆணையம் 46 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் 13 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண் அலுவலர் நுழைந்தது போன்ற சம்பவங்கள் தேர்தல் ஆணையம் மேல் வைத்த நம்பிக்கையை இழக்க வைக்கிறது.
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக உள்ளது - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
கடலூர்: 46 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ஆளுங்கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை காட்டுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
கே பாலகிருஷ்ணன்
கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது என்ற எண்ணம் தோன்றுகிறது. வருகிற 23-ஆம் தேதி மத்தியிலும் மாநிலத்திலும் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்" என்றார்.