கடலூரில் திராவிடர் கழக நிர்வாகியின் இல்ல திருமண விழாவிற்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”மே 23ஆம் தேதிக்கு பிறகு இப்போது இருக்கும் ஆட்சி மீண்டும் வராது என்றும், எல்லா தரப்பு மக்களும் இந்த ஆட்சியின் மீது அதிருப்தியை காட்டியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
‘ராஜ விசுவாசிகள்..!’ - தேர்தல் ஆணையத்தை சாடிய கி.வீரமணி! - ராகுல்
கடலூர்: ராஜ விசுவாசிகளாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் செயல்படுவதாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேபோல், திமுக தேர்தல் அறிக்கையில் இருந்த நீட் தேர்தவு ரத்து போன்ற அறிவிப்புகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதை குறிப்பிட்ட அவர், இந்த தேர்தலில் தப்பித் தவறி மோடி வந்தால் மீண்டும் தேர்தலே நடக்காது என்று எச்சரித்தார். தமிழ்நாட்டில் கருப்பு கொடி காட்டுவதைப் போல ஆந்திரா மற்றும் அசாமிலும் மோடிக்கு எதிராக கருப்பு கொடு காட்டப்படுவதாக கூறிய அவர், நாட்டில் மோடிக்கு எதிரான அலை இருப்பதாகத் தெரிவித்தார். மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலும், இங்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி மாற்றம் நடைபெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆட்சி மாறுவது உறுதி. எனவே, அதிகாரிகள் ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகளாக இருக்கக்கூடாது என்று கூறிய வீரமணி, வருமான வரி சோதனைகள் எதிர்க்கட்சிகளை குறி வைத்தே நடத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.