கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்தவர்கள் சேட்டன் (24), சிவபிரசன்னா (24), கிரீஸ் (21), மகேஷ் (21) மற்றும் கணேஷ் (22). இவர்கள் மைசூரில் இசைக்குழு ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 5 பேரும் தவில் வாங்குவதற்காக மைசூரில் இருந்து காட்டுமன்னார் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
கார் விபத்தில் கர்நாடக இசைக்கலைஞர் பலி - கார் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து
கடலூர்: கார் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் உயிரிழந்தார். படுகாயமடைந்த நால்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்போது பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் கீழ்கொள்ளை அய்யனார்கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிச் சென்ற சேட்டன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தாண்டிகுப்பம் காவல்துறையினர், படுகாயமடைந்த நால்வரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.