கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இச்சூழலில் வேளாண் துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி கடலூர் மாவட்டத்திற்கு கரோனா தடுப்பு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல்.15) கடலூர் வந்த அவர், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். தொடர்ந்து, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடும் மையத்தை பார்வையிட்டார்.
கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப்சிங் பேடி, "கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 45 வயதுக்கு மேற்பட்டோர் வரும் 10 நாள்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும். கரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தாம்பரம் போக்குவரத்து பணிமனையில் முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி!