கடலூர்:திருப்பாதிரிப்புலியூரில் திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நேற்று (ஏப்.10) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, "1929ஆம் ஆண்டு பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது, திராவிடர் கழகம்.
அந்த தீர்மானத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சட்டமாக மாற்றினார். திராவிடர் கழகம் அமைத்த அடித்தளத்தால் இன்று சாமானியர்களும் பதவி வகித்து வருகின்றனர். திராவிட மாடல் ஆட்சி குறித்து உலகம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர். குலக்கல்வித் திட்டத்தின் மறு உருவமாக நீட் வந்துள்ளது.