கடலூர்: பண்ருட்டி அடுத்த புதுபிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் மோகன்ராஜ். இவரும், பணிக்கன்குப்பம் பகுதியைச் சேர்ந்த எஸ்டர் சந்தியா என்பவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர்.
பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மோகன்ராஜ் - எஸ்டர் சந்தியா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் எஸ்டர் சந்தியா நீதிமன்றத்தில் விவாகரத்து குறித்து வழக்குத் தொடர்ந்துள்ளார். விவாகரத்து வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், காதல் மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவரும் சோகத்தில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி மோகன்ராஜ் பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.