கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் திருமணத்தை வேண்டுமென்றே நிறுத்திய மணமகள் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடு கேட்டு புகார் மனு அளித்துள்ளார்.
அப்புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, பண்ருட்டியைச் சேர்ந்த ஜெயச்சந்தியா என்கிற பெண்ணுடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும், அதற்கு முன்பாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வின் போது, பெண் வீட்டாரின் உறவினர் ஒருவர் மது அருந்தி விட்டு நடனம் ஆடியபோது இவ்வாறு செய்ய வேண்டுமெனக் கூறியதாக தெரிவித்துள்ளார்.