நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) இன்று (செப்.13) நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், நெய்வேலி உள்ளிட்ட நான்கு பகுதிகளில் 10 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 5227 மாணவ மாணவிகள் தேர்வை எழுதினர்.
கடலூரில் 5,000 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்! - ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவ நுழைவுத் தேர்வை (நீட்) எழுதினர்.
five-thousand-students-are-writing-the-neet-exam-in-cuddalore
முன்னதாக, 11 மணியளவில் மாணவ, மாணவிகள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்தும், தகுந்த இடைவெளியை பின்பற்றியும், வெப்பமானி கொண்டு உடல் வெப்பத்தின் அளவை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:நீட் தேர்வு: தாலி, மெட்டியை கழற்றிய மாணவியால் பரபரப்பு