கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் தொடர்ந்து போலி மருத்துவர்கள் உள்ளதாக, அம்மாவட்ட அரசு தலைமை மருத்துமனை இயக்குநர் மாலதிக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து திட்டக்குடி பகுதியல் அரசு மருத்துவர் செல்வேந்திரன் தலைமையில், போலீசார் அப்பகுதியல் உள்ள மருந்தகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
திட்டக்குடியில் போலி மருத்துவர்கள் மூன்று பேர் கைது! - arrest
கடலூர்: திட்டக்குடி பகுதியில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது பாலிடெக்னிக் படிப்பு முடித்து, மருத்துவம் பார்த்த ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, அம்மன் மெடிக்கலில் 12ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில் மருத்துவம் பார்த்து வந்த பாக்கியலடசுமி, 10ஆம் வகுப்பு படித்த மீனா ஆகிய இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். ஒரே நாளில் மூன்று போலி மருத்துவர்களை கைது செய்துள்ளதால், திட்டக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கைது செய்ததை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.