தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறை ரேசன் கடைகளில் சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டும். போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட வேண்டும். ரேஷன் கார்டு எண்ணிக்கைகளுக்கு ஏற்ப பொருள்களை வழங்க வேண்டும். சிஎன்சிசி இணையான சம்பளம் வழங்க வேண்டும். உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை ஊழியர்கள் கடந்த 11ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
30அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை ஊழியர்கள் சாலை மறியல்! - மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன்
கடலூர்: 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை சங்கம் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நியாய விலை கடை ஊழியர்கள் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுநகர் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.