கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்துள்ள ராமநாதன் குப்பத்தில் வீட்டில் போலி மதுபானங்கள் தயாரிப்பதாக குள்ளஞ்சாவடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ஊரடங்கை பயன்படுத்தி போலி மதுபானங்கள் தயாரித்ததாக காவல்துறையினர் ஆறு பேரை கைது செய்தனர்.
கிருமி நாசினி கொண்டு போலி மதுபானம் தயாரித்த ஆறுபேர் கைது!
கடலூர்: ஊரடங்கை பயன்படுத்தி கிருமி நாசினி கொண்டு, வீட்டில் போலி மதுபானம் தயாரித்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கிருமி நாசினிகளை கொண்டு மதுபானங்களை தயாரித்தது தெரிய வந்தது. அதனையடுத்து காவல்துறையினர் அந்த மதுபானங்களை ஆய்வுக்காக சுகாதரத்துறையினருக்கு அனுப்பிவைத்தனர். ஆய்வின் முடிவில் மதுபானத்தில் கிருமி நாசினி கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போலி மதுபானம் தயாரித்த கும்பல்களிடம் இருந்து, மதுபானம் தயாரிக்கும் இயந்திரம், பாட்டில்கள், லேபில், அட்டைபெட்டிகள், சரக்கு வாகனம் உள்ளிட்ட அனைத்தையும் கைப்பற்றினர். போலி மதுபானம் தயாரித்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறையில் அடைத்தனர்.