தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Watch Video: ஆங்கிலத்தை தவறாகப் பேசி மாட்டிக்கொண்ட போதை ஆசாமி!

கடலூரில் குடித்துவிட்டு போக்குவரத்து காவல் துறையினரிடம், அரைகுறை ஆங்கிலத்தில் சண்டையிட்ட ஆசாமியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

போலீசை வறுத்தெடுத்த ஆசாமி
போலீசை வறுத்தெடுத்த ஆசாமி

By

Published : Dec 12, 2021, 6:35 PM IST

கடலூர்:புதுச்சேரி மாநில எல்லையில், ஏராளமான மதுபானக் கடைகள் உள்ள நிலையில், அங்கு சென்று மது அருந்திவிட்டு வருபவர்களை காவல் துறையினர் ஆங்காங்கே பிடித்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்ததற்காக, அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே போக்குவரத்து காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு நபர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து காவல் துறையினர் சென்று, பிடித்தபோது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.

'நானும் கடலூருக்காரன் தான்'

பின்னர் காவல் துறையினர் அவரிடம் உங்கள் பெயர் என்ன, எந்த ஊர் என்று கேட்டதற்கு 'நான் திருச்சி, திருநெல்வேலி அல்ல, நான் கடலூர் OT (ஓடி) பகுதியைச் சேர்ந்தவன்.

நான் கடலூர் ஓடி மற்றும் தேவனாம்பட்டினம் கல்லூரியில் படித்தவன். அதனால், என்னை நீங்கள் நிறுத்தக்கூடாது, என்னை ஏன் நிறுத்தினீர்கள்' எனத் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் தவறாக கடகடவென உளறித் தள்ளினார்.

என்ன சிரிப்பு..its my english

இங்கிலீஷில் சண்டையிட்டு போலீசை வறுத்தெடுத்த ஆசாமி

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர், 'ஏன் பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள்' என்று கேட்டபோது, மீண்டும் நிறுத்தாமல் அவர் ஆங்கிலத்தில் சரியாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு உளறினார்.

இதனைப் பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் சிரித்த நிலையில், 'ஏன் சிரிக்கிறீர்கள். நான் ஆங்கிலத்தில் இலக்கணத்துடன் பேசுகிறேன்' எனக் கூறினார்.

பின்னர் பொறுமை இழந்த காவல் துறையினர் அவருடைய வாகனத்தைப் பறிமுதல் செய்ததுடன், அவரை அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து இன்று(டிச.12) காலை காவல் நிலையத்திற்கு வந்த அவர், தன் பெயர் கலைவாணன் என்றும் கடலூர் துறைமுகம் பகுதியில் வசித்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் குடிபோதையில் தவறுதலாகப் பேசி விட்டதாகவும், என்னை மன்னித்து விடவேண்டும் என்றும் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு, ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காகவும்; ஓட்டுநர் ஆவணம் இல்லாமல் வந்ததற்காகவும் ரூ.600 அபராதம் கட்டி விட்டுச் சென்றுள்ளார்.

தற்போது கலைவாணன் பேசிய இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க:#HBDSuperstarRajinikanth - இவன் திரையுலகை அதிரவைத்த அதிரடிக்காரன்

ABOUT THE AUTHOR

...view details