17ஆவது மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
கடலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி! - திமுக
கடலூர்: திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் கடலூர் மக்களவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 983 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் முன்னிலையில் இருந்தார். 23ஆவது சுற்றில் முடிவில் அவர் பெற்ற மொத்த வாக்குகள் ஐந்து லட்சத்து 22 ஆயிரத்து 160 பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கோவிந்தசாமி மூன்று லட்சத்து 78 ஆயிரத்து 177 வாக்குகள் பெற்றிருந்தார்.
23ஆவது சுற்றில் முடிவில் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்புச்செல்வன், திமுக வேட்பாளர் ரமேஷ் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 983 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தார். பின்னர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.