கடலூர் அடுத்த வடக்கு ராமாபுரம் எஸ்.புதூர் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு 100 வீடுகள் உள்ள நிலையில், இந்தச் சமத்துவபுரம் பின் பக்கம் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டி தர தனியார் தொண்டு நிறுவனம் 2012 ஆம் ஆண்டு முன்வந்தது.
அதன் பேரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் 2013 ஆம் ஆண்டு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்கு 130 வீடுகள் கட்டப்பட்டன. அந்த வீடுகள் சரியில்லை தங்களை மீண்டும் அகதிகள் போல் அடைத்து வைக்கும் நிலையில் வீடுகள் உள்ளது என கூறி, அதில் இலங்கை தமிழர்கள் குடியேற மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இதில் சில வீடுகள் பாழடைந்து உள்ளன. தற்போது அந்த இடத்தில் 130 வீடுகள் இருந்த நிலையில், அவ்வப்போது சமுக விரோத செயல்கள் அந்த வீடுகளில் நடைபெறுவதாக தொடர் குற்றசாட்டு எழுந்தது. மேலும் வீட்டிலிருந்த மின்சார வையர்கள் காணாமல் போகிறது எனவும் புகார்கள் எழுந்தன.
அதன் பின் 130 வீடுகளில் பல வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் 50 வீடுகள் மட்டும் தற்போது பாழடைந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் உள்ள இளைஞர் சிலர் பாழடைந்த வீட்டிறக்கை சென்று கேம் விளையாடுவது, தூங்கவது போன்ற செயல்களில் ஈடுப்பட்டுள்ளனர்.
திடீரென விழுந்த வீடு